ட்ரெண்டிங்

நடைபயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

நடைபயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் இன்று காலை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து ஏற்காடு அடிவாரம் மாடர்ன் தியேட்டர் வரை 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையைத் தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.