ட்ரெண்டிங்

பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டணி- ஜி.கே.வாசன் எம்.பி. அறிவிப்பு! 

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்திருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மாநில பா.ஜ.க. தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளனர். அதன்படி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த நிலையில், பா.ஜ.க. உடனான கூட்டணி உறுதியானதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வளமான பாரதம் அமைய விரும்பும் கட்சிகள் அனைத்தும், பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் நட்பு அடிப்படையில் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நாளை (பிப்.27) பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தானும் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவித்தார்.