ட்ரெண்டிங்

சேலம் கடைவீதியில் வாக்குச்சேகரித்த எடப்பாடி பழனிசாமி! 

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணமாகச் சென்று வாக்குச்சேகரித்த கடைவீதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். 

கடந்த மார்ச் 30- ஆம் தேதி சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி உள்ளிட்டப் பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார். இந்த நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து சேலம் கடைவீதி பகுதிக்கு சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்கி வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.