ட்ரெண்டிங்

சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

சேலம் வழியாக பெங்களூரு, கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி 22, 24 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் (ரயில் எண் 06501), பிப்ரவரி 23, 25 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும் (ரயில் எண் 06502) சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 

இந்த சிறப்பு ரயில்கள், பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரபேட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்,. இந்த ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.