ட்ரெண்டிங்

முதலமைச்சர் வருகை- சேலத்தில் டிரோன்கள் பறக்கத் தடை! 

தமிழ்நாடு முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 11- ஆம் தேதி அன்று டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூலை 11- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக, வருகின்ற ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைப்புரிந்து தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார். 

இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 11- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.