ட்ரெண்டிங்

தேங்காய் நார் குடோனில் திடீர் தீ விபத்து!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் குடோன் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்.19) மதியம் தேங்காய் நார் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

 

தேங்காய் நார் என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இது குறித்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை சுமார் நான்கு மணி நேரம் போராடி அணைத்தனர். 

 

எனினும், தீ விபத்தில் லட்சக்கணக்கான தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து ஓமலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து குடோன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.