ட்ரெண்டிங்

காங்கிரஸ் கட்சி போட்டியிலும் தொகுதிகள் அறிவிப்பு! 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிப் போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளும், புதுச்சேரி மக்களவையும் என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் போட்டியிடும் தொகுதிகளை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர். 

அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.