தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 21) முதல் ஏப்ரல் 21- ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். அதன்படி, 01/07/2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க வாகனம் ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் வேண்டும்.
செல்லத்தக்க நடத்துனர் உரிமம் 01/01/2025 முன்னதாக பெற்றதாக இருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ., எடை 50 கிலோ கிராம். தெளிவான குறைபாடுகளற்ற கண் பார்வை எவ்வித உடல் அங்க குறைபாடுகளும் அற்றவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



-SXgDfGgJfO.jpg)