ட்ரெண்டிங்

விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார். இந்த விபத்துக் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

 

நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மனோகரன் தனது மனைவி சுமதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் மனோகரன் மற்றும் அவரது மனைவி லேசான காயமடைந்தனர். பின்னர் அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து காரணமாக, அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

விபத்தில் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்தது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.