சேலம் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 20,000 லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயைச் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், சாலைப் பணிகள் நடப்பதால் மாற்றுப் பாதையில் குடிநீர் குழாய் பதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஓமலூர் பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதாகவும், அதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


