சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.07) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,சாலை விபத்துகளை முற்றிலும் குறைத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்கிடும் நடவடிக்கைகள் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல்துறை. போக்குவரத்துத்துறை. வருவாய்த்துறை அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது. மற்றும் நெடுஞ்சாலைத்துறை
குறிப்பாக, மனித உயிர்களின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு. பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும். விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிதல், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிதல், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தொடர் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து காவல்துறை. நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும்
வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களில் தனி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளைக் கண்டறிந்து தேவையான சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். பேருந்து நிறுத்தங்களில் உரிய நேர அட்டவணைகளைப் பின்பற்றி வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பயணிகளின் வசதிக்கேற்ப சீர்படுத்திட போக்குவரத்துத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை. ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை. பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாகத் தெரியும் வண்ணம் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்திட வேண்டும். குறிப்பாக, சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்துத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, மாநகர காவல் துணை ஆணையர்கள் பிருந்தா, வேல்முருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, லோகநாயகி உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)