ட்ரெண்டிங்

அரசு மருத்துவமனையில் லிப்ட் வேலை செய்யாததால் நோயாளிகள் அவதி!

 

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் லிப்ட் வேலை செய்யாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தலைவாசல், ஆறகழூர், கெங்கவல்லி, வீரகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். இந்த சூழலில், மருத்துவமனையில் உள்ள லிப்ட் வேலை செய்யாததால் வயதானவர்களும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டோரும் சிரமமடைந்து வருகின்றனர்.

 

இது குறித்து ஆத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் பானுமதி கூறுகையில், "பராமரிப்புப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வுக் காணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.