ட்ரெண்டிங்

விநாயகர் சதுர்த்தி- சிறப்பு ரயில் அறிவிப்பு! 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும் சென்னை சென்ட்ரல்- கோவை இடையே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் செப்.06- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கும், செப்.08- ஆம் தேதி கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் சுமார் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.