ட்ரெண்டிங்

தாம்பூலத் தட்டுடன் வந்து ஆட்சியரிடம் மனு! 

கடந்த 1955- ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், கெங்கவல்லி நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்ற மூதாட்டிக்கு 9 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியிருந்தது. இந்த நிலையில், விசாரணை என்ற பெயரில் தாசில்தார் வேறு ஒருவரிடம் ஆதாயத்தைப் பெற்றுக் கொண்டு மாற்றி கொடுத்துவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லட்சுமியம்மாளின் பேரன் பாலமுருகன் தாம்பூலத் தட்டில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவைகளுடன் மனுவை வைத்து எடுத்து வந்து வித்தியாசமான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் மனு அளித்து இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான இடம் என்று பதில் அளித்துள்ளனர்.ஆனால், இதனை நீதிமன்ற உத்தரவு மாற்றிவிட்டதால் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வித்தியாசமான முறையில் பாதிக்கப்பட்ட நபர் மனு அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.