ட்ரெண்டிங்

கைகலப்பில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்!

 

எடப்பாடி அருகே கைக்கலப்பில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். 

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நைனாம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2,500- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

 

அப்போது, அந்த வழியாக வந்த சங்ககிரி கோட்டாட்சியர் லோகநாயகி, வட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகிய இருவரும் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்வதற்காக, எடப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுள்ளனர். 

 

அங்கு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக காவல்துறையினரை தொலைபேசியில் அழைத்து, இது குறித்து தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர், சண்டையில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.