சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வு சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 மையங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள்,தேர்வுக்கான, அழைப்பிதழ்களை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என வங்கித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழுத்துத் தேர்வுடன் இணைந்து பின்னர் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் சேர்த்து, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில், உதவியாளர் பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் மூலம், சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணியாற்ற இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாக இருப்பதால், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


