ட்ரெண்டிங்

மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த உலோகத்தை வெற்றிகரமாக அகற்றி சாதனைப் படைத்த அரசு மருத்துவர

 

காது, மூக்கு, தொண்டை பிரிவில் 30 வயது பெண் கள்ளக்குறிச்சியில் இருந்து நுரையீரல் பகுதி மூச்சுக் குழாயில் சிக்கிய, உடைந்த 4 செ.மீ. அளவில் உள்ள டிரக்கியாஸ்டமி உலோக குழாய்யுடன் கடந்த அக்டோபர் 12- ஆம் தேதி அன்று அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் தலைமையிலான மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக காது மூக்கு தொண்டை மற்றும் மயக்கவியல் பிரிவும் சேர்ந்து நவீன 'Telebronchoscope' கருவியின் உதவியுடன் நுரையீரல் பகுதி, மூச்சு குழாயில் சிக்கிய, உடைந்த டிரக்கியாஸ்டமி உலோகம் மூச்சுக் குழாயில் இருந்து பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு, நோயாளி காப்பாற்றப்பட்டார். இந்த சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது.

 

30 வயது நிரம்பிய பெண்ணிற்கு 8 வருடத்திற்கு முன்பு தொண்டையில் ஏற்பட்ட விபத்தினால் உணவு குழாய் மற்றும் மூச்சு குழாயில் அடைப்பு இருந்ததினால் 8 வருடங்களாக டிராக்கியஸ்டமி உலோக குழாய் வழியாக சுவாசித்துக் கொண்டிருக்கிறார். இது பழுது அடைந்து அதன் பாதி பகுதி உடைந்து மூச்சுக் குழாயில் சிக்கிய நிலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கபட்டார். பின் உடனடியாக அன்றே காது, மூக்கு. தொண்டை மற்றும் மயக்கவியல் பிரிவு சேர்ந்து நவீன Telebronchoscope கருவியின் உதவியுடன் நுரையீரலில் சிக்கிய உடைந்த டிரக்கியாஸ்டமி உலோக குழாய் பாதுகாப்பாக முறையில் அகற்றப்பட்டது.

 

இதையடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சக நோயாளிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.