ட்ரெண்டிங்

ரூபாய் 7.76 லட்சத்திற்கு ஏலம் போன கொப்பரைத் தேங்காய்கள்!

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு முறை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 228 மூட்டை கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர்.

 

60வது வகையான எண்ணெய் பிழித்திறன் கொண்ட 10,516 கிலோ எடையுள்ள கொப்பரைத் தேங்காய் சுமார் 7 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தரம் மதிப்பீட்டின் அடிப்படையில், அதிகபட்சமாக ஒரு கிலோ கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக 79 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 59 ரூபாய்க்கும் கொப்பரைத் தேங்காய்கள் எலாம் விடப்பட்டன.

 

வழக்கமான விலையை விட கூடுதல் விலைக் கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.