ட்ரெண்டிங்

நீட் நுழைவுத் தேர்க்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணாக்கர்கள் இன்று (பிப்.10) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இன்று (பிப்.10) முதல் வரும் மார்ச் 9- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் வரும் மே 05- ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.