வரும் நவ.29- ஆம் தேதி சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சேலம் புத்தகத் திருவிழா-2024 தொடங்குகிறது. இந்த நிலையில், நாள்தோறும் மாலை புத்தக திருவிழாவில் முதன்மை விருந்தினர்கள் கலந்துக் கொள்ளும் கருத்துரைகள் நடைபெறவுள்ளது. கருத்துரை வழங்கும் முதன்மை விருந்தினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதல் நாளான நவ.29-ம் தேதி அன்று தன்னம்பிக்கை ஊக்கப் பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் சிறப்புரை வழங்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து, 2-ஆம் நாளான நவ.30-ம் தேதி அன்று நாஞ்சில் நாடன், பசியும் சுவையும் என்ற தலைப்பிலும், 3-ஆம் நாளான டிச.01-ம் தேதி அன்று பவா செல்லதுரை என் அன்பான புத்தகமே என்ற தலைப்பிலும், 4-ஆம் நாளான டிச.02- ம் தேதி அன்று யுவன் சந்திரசேகர், மாற்று எழுத்து என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனர்.
மேலும், 5-ஆம் நாளான டிச.03-ம் தேதி அன்று ஆனந்தகுமார் இ.ஆ.ப. மைதீரா பேனாவின் எழுத்திசை என்ற புத்தகத்தை வெளியிட்டு நூற்றுக்கு நூறு என்ற தலைப்பிலும், ஹரிகிருஷ்ணன் நிகழ்த்துக் கலைகள் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனர். அதேபோன்று, 6 -ஆம் நாளான டிச.04-ம் தேதி அன்று பெருமாள் முருகன் புத்தகமே பெரும் துணை என்ற தலைப்பிலும், 7-ஆம் நாளான டிச.05- ம் தேதி அன்று சித்ரா பாலசுப்ரமணியம் வான் குருவியின் கூடு என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனர்.
8-ஆம் நாளான டிச.06- ம் தேதி அன்று முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கச்சிதம் என்பது கதை என்ற தலைப்பிலும், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் முழுமையை நோக்கி என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனர். அதேபோன்று, 9-ஆம் நாளான டிச.07- ஆம் தேதி அன்று விஷ்ணுபுரம் சரவணன், குழந்தைகளும் கதைகளும் என்ற தலைப்பிலும், 10-ஆம் நாளான டிச.08- ஆம் தேதி அன்று ரேவதி, என்றாலும் நான் எழுகிறேன் என்ற தலைப்பிலும், 11-ஆம் நாளான டிச.09- ஆம் தேதி அன்று ஜீவானந்தம் வண்ணம் பேசும் மொழி என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனர்.

-fronx-cng-pEhqHG9vjf.jpg )

-SXgDfGgJfO.jpg)