ட்ரெண்டிங்

ரூபாய் 525 கட்டணத்தில் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு பறக்கலாம்!

 

அலையன்ஸ் ஏர் (Alliance Air) விமான நிறுவனம், சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களுக்கு இரு மார்க்கத்திலும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. 

 

இந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், சேலத்தில் இருந்து கொச்சி செல்வதற்கு ரூபாய் 1,050- ஐ பயணக் கட்டணமாகவும், சேலத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்கு ரூபாய் 525- ஐ பயணக் கட்டணமாகவும் விமான நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 

 

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் https://allianceair.in/book என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.