சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மதுரை வீரன் கோயில் எதிரில் உள்ள பாலம் சிதலமைடைந்து கால்வாய் பாலத்தினை இடித்து புதியதாக கட்டும் பணி மாநகராட்சி மூலம் பணிகள் துவங்கப்பட்டு முடிவடைந்துள்ளது. பாலத்தின் நடுப்பகுதிகளில் குடிநீர் குழாய் மூலம் 24*7 குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பகிர்மானக்குடிநீர் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் மேற்பகுதியில் புதிய பைப் லைன்கள் போட உத்தேசிக்கப்பட்ட காரணத்திற்காக கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் நவ.05- ஆம் தேதி முதல் நவ.07- ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
கோட்டம் எண்.32 முதல் அக்ரஹாரம், ஆற்றோரம் தெரு, அதியமான் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, சேர்மேன் இராஜரத்தினம் தெரு, சென்ன கிருஷ்ணன் தெரு, சின்னக்கடைவீதி,சிட்டுகோவில் தெரு, தேவேந்திரபுரம் 1,2,3, கோவிந்தன் தெரு, கல்லாங்குத்து தெரு, காமராஜர் தெரு, குட்டி வைத்தியர் தெரு, மஜீத் தெரு, சித்தன் தெரு, தேர்வீதி தெரு, விக்டோரியா மார்க்கெட் அரசமரம் பிள்ளையார் கோவில் தெரு, அருணாச்சலம், ஆசாத் தெரு, பஜார் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மார்க்கெட் தெரு, மேட்டுமக்கான் தெரு, மிளகாய்கராத் தெரு, முகமது புறா தெரு, முத்தவள்ளி முகமது யாகூப் தெரு, நராயணன் தெரு, பெரியார் தெரு, பொச்சின் தெரு, ராகவன் தெரு, சுப்பிரமணி தெரு. வால்மிகி தெரு, கணக்கர் தெரு, மேட்டுமஜீத் தெரு ஆகிய தெருக்களிலும், கோட்டம் எண்.33 முராரி வரதைய்யர் தெரு, பெண்ணாடம் வெங்கட்ராமன் தெரு, பூஞ்சாங்குட்டை தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, மூன்றாவது அக்ரஹாரம், காசி முனியப்பன் கோவில் தெரு, இரண்டாவது அக்ரஹாரம், லவ் ஓ காலனி, ஆற்றோரம் தெரு ஆகிய பகுதிகளிலும் கோட்டம் எண். 41 ராமசுந்தரம் தெரு, மடம் தெரு, கோவில் தெரு, பாவடி தெரு, பச்சமுத்து தெரு, சத்தியமூர்த்தி தெரு, குமரன் தெரு, சேர்மேன் ராமலிங்கம் தெரு, கோட்டம் எண்.42 குறிஞ்சி நகர், காளிமுத்து தெரு, ராமசாமி தெரு, நாராயண நகர் 1 முதல் 6-வது கிராஸ் வரையிலும் நாளை (நவ.04) முதல் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். ஆகவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.


