ட்ரெண்டிங்

பட்டியலின மக்களின் தொடர் கோரிக்கை: பணிகளைத் தொடங்கி வைத்த அருள் எம்.எல்.ஏ.!

 

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

 

கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் 500- க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், இந்த பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கினர்.

 

இதற்கு பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் அருள், பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.