ட்ரெண்டிங்

ஸ்பெயின் பயண வெற்றியைப்போல இந்தியாவின் வெற்றி அமையும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 

ஸ்பெயின் பயணம் வெற்றிபோல இந்தியாவின் வெற்றி அமையும் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில், "இந்திய ஜனநாயகம் காக்கப்பட்டதால் தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்து தேர்தல் லாபம் தேடும் அரசியல் ஸ்பெயினில் இல்லை. வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடத்தை ஆட்சியாளர்கள் இடித்து தகர்க்கவில்லை.

 

வதந்திகளைப் பரப்பியும், அவதூறுகளால் அரசியல் பிழைப்பும் நடத்துகின்றனர். வரலாற்றை சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை வாக்குரிமையால் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய நாம் சொல்ல மறந்தால் வரலாறு இல்லாத ஒரு கூட்டம் அதனை திரிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.