ட்ரெண்டிங்

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

 

டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.07) காலை 11.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் உள்பட 14 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் என மொத்தம் 15 பேர் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர்.

 

அவர்களை பா.ஜ.க. தலைவர்கள் சால்வை அணிவித்தும், ரோஜா பூக்கொத்து வழங்கியும் வரவேற்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.கவில் இணைந்திருப்பது அ. தி.மு.க., தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது