ட்ரெண்டிங்

மினி ஆட்டோ 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!


சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கொல்லிமலையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய மினி ஆட்டோ 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

மேலும், தலையில் பலத்த காயமடைந்த ராமதாஸ், மேகலா, மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் மேல் சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.