ட்ரெண்டிங்

சேலத்தில் பரபரப்பு: இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு !!!

சேலத்தில் பரபரப்பு: இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

 

சேலத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.... மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை...

 

சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பிடாரியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி.இவர் பெங்களூருவில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பாபு மற்றும் கார்த்திக் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.பாபு கொத்து வேலை செய்து வருகிறார்.கார்த்திக் கல்லூரியில் படித்து வருகிறார்.கார்த்தி மாலை அணிந்து கோவிலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 1:30 மணி அளவில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. 

 

இதனால் இரு சக்கர வாகனம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதே போல அதே பகுதியில் உள்ள சிவராஜ் என்பவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இவர் ஆடியோ மற்றும் ஜெனரேட்டர் வேலை செய்து வருகிறார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சினாள் வீட்டின் முன்பக்க கதவு எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வருவதற்கு முன்பாகவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். எரிந்து கொண்டிருந்த தீயினை தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அழகாபுரம் காவல் துறையினர் எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் தீயை அணைத்தனர்.

 

 மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.