ட்ரெண்டிங்

ரூபாய் 1.51 கோடி பருத்தி வர்த்தகம்.... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற வேளாண் கூட்டுறவுச் சங்க விற்பனைக் கூடத்தில் ரூபாய் 1.51 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

 

நேற்று (பிப்.05) நடந்த ஏலத்திற்கு கெங்கவல்லி, தலைவாசல், ஆறக்களூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள், 6,306 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட நிலையில், குவிண்டாலுக்கு ரூபாய் 2,000 விலை அதிகரித்து ஏலம் போனது.

 

கடந்த வாரத்தைக் காட்டிலும் விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.