ட்ரெண்டிங்

600 கிலோ குட்கா-பாமக நிர்வாகி உட்பட 3 பேர் கைது !!!

 

கர்நாடகாவில் இருந்து நாமக்கல்லுக்கு மினி வேனில் கடத்திய 600, கிலோ குட்காவை சேலத்தில் போலீசார் சோதனையில் பிடிபட்டது. 

கர்நாடகாவில் இருந்து சேலம் வழியாக நாமக்கல்லுக்கு குட்கா கடத்தி செல்லப்படுவதாக மாநகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 500 பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். 

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது அந்த வாகன ஓட்டுநர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார் இதனிடையே வாகனத்தை பின்தொடர்ந்து காரில் வந்த நபர்கள் அந்த மினி வேனில் உள்ள பொருட்கள் தங்களுக்கு சொந்தமானது என போலீசரிடம் தெரிவித்தனர் அப்போது அவர்கள் மீது சந்தேகம் வந்த போலீசார் அந்த மினி வேலை முழுமையாக சோதனை எட்டினர் அப்போது சுமார் 600 கிலோ தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்களையும் பள்ளப்பட்டி காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அவர்கள் மேட்டூர் தண்ணீர் குட்டப்பட்டியை சேர்ந்த கௌதம் பழைய தருமபுரி நாகரசம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சங்ககிரி கள்ளுக்கடையைச் சேர்ந்த அசோக் என்பது தெரியவந்தது இதில் கௌதம் என்பவர் நங்கவள்ளி கிழக்கு ஒன்றிய பாமக இளைஞரணி செயலாளராக உள்ளார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் மூவரும் பணம் பறிக்கும் கும்பலாக செயல்படுவது தெரியவந்தது.

இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக புகழைப் பொருட்கள் கடத்தி செல்பவர்களை நோட்டமிட்டு புகையிலை கடத்தல் வாகனம் வரும்பொழுது அவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதேபோல் தற்போது கர்நாடகாவில் இருந்து நாமக்கல் நோக்கி கடத்திவரப்பட்ட குட்கா வேனை விரட்டி வந்துள்ளனர். அப்போது போலீசாரிடம் பேசி குட்காவை எடுத்து சென்று விடலாம் என அவர்கள் முயற்சி செய்துள்ளனர் ஆனால் போலீசாரின் அதிரடியான விசாரணையில் அவர்கள் குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துபவர்களிடமிருந்து பணம் பறிப்பது உறுதியானது. 

இதைத்தொடர்ந்து மூணு பேரையும் கைது செய்த பள்ளப்பட்டி போலீசார் கார் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர். அதே போல் இந்த கும்பல் இதுவரை வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளனர். வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மினி வினை ஒட்டி வந்த ஓட்டுநர் மேச்சேரி அடுத்த காளிப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.