ட்ரெண்டிங்

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூபாய் 630 கோடி நிதி ஒதுக்கீடு!

 

இரண்டு ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூபாய் 630 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் புனரமைப்புக்கு இரண்டு ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 200 கோடியுடன் நன்கொடையாளர்களின் ரூபாய் 104.84 கோடியும் சேர்த்து 197 கோயில்களில் திருப்பணி நடக்கிறது.

 

கிராமப்புற ஆதி திராவிடர், பழங்குடியினர் வசிப்பிடப் பகுதி கோயில்களுக்கான நிதி ரூபாய் 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருகால பூஜை திட்டத்தில் 17,000 கோயில்களுக்கு வைப்பு நிதி ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி ரூபாய் 330 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.