ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு !!!

 

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடுகள், வணிக நிறுவனங்களில் வழக்கத்தை விட கூடுதல் அளவில் திடக்கழிவுகள் உருவாகும் நிலை உள்ளது. 

இத்தகைய கழிவுகளை சாலையோரங்களில், காலி மனைகளில் அல்லது நீர்நிலைகளில் கொட்டுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தினசரி வீடு வீடாக மாநகராட்சி சார்பில் திடக்கழிவு சேகரிக்கும் வாகனங்கள் செல்கின்றன. எனவே, மக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து, அந்த சேகரிப்பு வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு மட்டுமே நகரின் சுத்தம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பாக அமையும் என்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.