வாழப்பாடிக்கு அருகே உள்ள நகைக்கடையில் கவரிங் நகைகளைக் கொடுத்து இளம்பெண் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடிக்கு அருகே உள்ள பேளூரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் தங்கநகைகள் வாங்குவது போல் சென்ற இளம்பெண் தான் அணிந்திருந்த நகையை கழற்றிக் கொடுத்து விட்டு, ஏழரை சவரன் தங்கநகையை வாங்கிச் சென்றுள்ளார்.
அந்த இளம்பெண் கொடுத்த நகைகளை சில நாட்கள் கழித்து நகைக்கடை நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது, அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், நகைக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


