ட்ரெண்டிங்

சேலத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! 

சேலம் மாவட்டத்தில் நாளை (மே 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும், நாளையும் வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். தமிழகத்தின் இதர மாவட்டங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்ப அலை வீசும். 

தமிழகத்தில் சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (மே 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் மே 08- ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.