ட்ரெண்டிங்

ரூபாய் 1.1 கோடிக்கும் ஏலம் போன பருத்தி!

 

ஆத்தூரில் 1.1 கோடி ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் ஆகிய இடங்களில் இருந்து 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4,000- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 1.1 கோடி ரூபாய்க்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது. வழக்கத்தை விட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.