ட்ரெண்டிங்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி- கோவை- வாரணாசி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் டிச.19- ஆம் தேதி முதல் கோவையில் இருந்து வாரணாசிக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் 19- ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 21- ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கத்தில், டிசம்பர் 24- ஆம் தேதி இரவு11.20 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 27- ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு கோவையைச் சென்றடையும்.

 

மற்றொரு ரயில், டிசம்பர் 25- ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, டிசம்பர் 27- ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கத்தில், டிசம்பர் 24- ஆம் தேதி இரவு, 11:20 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், வரும் ஜனவரி 02- ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு கோவையை சென்றடையும்.

 

இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.