ட்ரெண்டிங்

ஜோகோவிச்சைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை விமானத்தில் சந்தித்துப் பேசினார். 

 

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் செல்லும் போது, விமானத்தில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை நேரில் சந்தித்துப் பேசியதுடன் அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொணடார். அத்துடன், புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

இதனிடையே, ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய தூதர் தினேஷ் கே.பட்நாயக் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பை அளித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டின் தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொள்ளும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்கிறார்.