தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் சாலை மறியல்: 150-க்கும் மேற்பட்டோர் கைது
சேலம்: நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைகளில் மேற்கொள்ளப்படும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக சேலம் கோட்டை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



-SXgDfGgJfO.jpg)