ட்ரெண்டிங்

ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுத்தாத விபத்தில்லாத தீபாவளி-பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படு

 

என் குப்பை-எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் சார்பில், இன்று (நவ.11) காலை 07.00 மணிக்கு சேலம் மாநகராட்சியின் 34-வது வார்டில் உள்ள, அய்யாசாமி பசுமை பூங்காவில் உள்ள மிகப் பழமையான மரங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான வவ்வால்களைப் பாதுகாக்க அப்பூங்கா அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் வெடிச் சத்தத்தால் ஏற்படும் அதிர்வுகளையும் புகைமூட்டத்தையும் தவிர்த்து அதனால் வவ்வால்களுக்கு தீங்கு ஏற்பட்டு, அவை வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்திடா வண்ணம் அவைகளுக்கு பாதுகாப்பு தந்திட வேண்டுகோள் விடுக்கும் வகையிலும்,34- வார்டு முழுவதும் ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுத்தாத விபத்தில்லாத தீபாவளி கொண்டாட்டம் வகையிலும்,மாமன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஈசன் இளங்கோ தலைமையில் தன்னார்வலர்கள் ஏராளமானோர் பதாகைகளை ஏந்தியவாறு, வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணரவை ஏற்படுத்தினர்.