ட்ரெண்டிங்

அதிகளவில் விற்பனையான வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் வாராந்திர ஆட்டுச்சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

வழக்கம் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், குறும்பாடுகள் என ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடையுள்ள ஒரு வெள்ளாடு 10,000 ரூபாய்க்கும், 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு 7,000 ரூபாய்க்கும் விற்பனையானது. 

 

ஓமலூர் ஆட்டுச்சந்தையில் மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. வழக்கத்தை விட கூடுதல் விலைக் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.