ட்ரெண்டிங்

தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!

தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் ஜனவரி 24- ஆம் தேதி மாலை 05.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர் டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (வயது 56), விமல் (வயது 28), அனுஷ்கா (வயது 23), ஜெனிபர் (வயது 29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும். இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.