ட்ரெண்டிங்

டாடா நகர்- எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

டாடா நகர்- எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிப்ரவரி 05, 12 ஆகிய தேதிகளில் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கும், பிப்ரவரி 08, 15 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 

இந்த சிறப்பு ரயில்கள், விஜயநகரம், விஜயவாடா, பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், நெல்லூர், குண்டூர், அரக்கோணம், காட்பாடி, ராஜமுந்திரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.