சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் 400 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு
சேலம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பண்டிகை காலமான அக்டோபர் 16 முதல் 19 வரை மொத்தம் 2,485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் நிலையத்திலிருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பண்டிகை நாட்களில் பயணிகள் பெருமளவில் வருகை தருவதால், வழக்கமான சேவைகளுடன் கூடுதலாக சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இந்த பேருந்துகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஈரோடு,ஓசூர்,வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும்.
அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்,கூடுதலாக டிக்கெட் கவுண்டர்கள், தகவல் மையங்கள், போக்குவரத்து காவலர் குழுக்கள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தீபாவளி பண்டிகை காரணமாக அதிகமான பயணிகள் வருவார்கள். அவர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்ய போதுமான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு.பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

--(7)-h6pLVkr6tK.jpg )
-SXgDfGgJfO.jpg)