ட்ரெண்டிங்

வாங்கல் ரயில் நிலையம் நிரந்தரமாக மூடல்!

 

வாங்கல் ரயில் நிலையம் நிரந்தரமாக மூடப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம்- நாமக்கல்- மோகனூர்- கரூர் ஆகிய ரயில் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் வரும் ஜனவரி 25- ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் எந்தவொரு ரயிலும் நிற்காது; இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் சேவையும் வழங்கப்பட மாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாங்கல் ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், தெற்கு ரயில்வேயின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டம் நிரந்தரமாக மூடுகிறது.