ட்ரெண்டிங்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 58). இவர் உடல்நலக்குறைவுக் காரணமாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 

உடலநலம் தேறியதைத் தொடர்ந்து, அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, அவரது உறவினர் ஒருவர் கார் மூலம் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 

இதையடுத்து, ஆண்டவரை காரில் ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கிக் சென்றுக் கொண்டிருந்த போது, பால் மார்க்கெட் அருகே கார் தீப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி இருவரும் இறங்கித் தூரமாக நின்றனர். தொடர்ந்து காரில் பற்றிய தீ மளமளவென எரிந்துக் கொண்டிருந்த நிலையில், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. 

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், காரின் 75% பகுதிகள் எரிந்து கருகின.