ட்ரெண்டிங்

வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வட மாநிலங்களில் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் இருந்து ஓமலூர் பூண்டு மண்டிகளுக்கு வரவேண்டிய பூண்டின் அளவு குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 180- க்கு விற்கப்பட்ட நிலையில், ரூபாய் 280 வரை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் பூண்டு ஒரு கிலோ ரூபாய் 350 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு காரணமாக, சில்லறை விற்பனை பாதியாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.