ட்ரெண்டிங்

பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை!

மாநாட்டு திடல் முன்பு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு திடல் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்த கனிமொழி எம்.பி. மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, ,மாநாட்டு திடல் முன்பு அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரது சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, மாநாட்டு அரங்கத்தை தி.மு.க.வின் மாணவரணிச் செயலாளர் எழிலரசன், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளதால், சேலம்- ஆத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.