ட்ரெண்டிங்

சென்னை சென்ட்ரல்- கோவை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள்!

 

சென்னை சென்ட்ரல்- கோவை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சென்ட்ரல்- கோவை இடையே இரு மார்க்கத்திலும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பர் 28- ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 30- ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

 

மேலும், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில்கள் நின்றுச் செல்லும். இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.