ட்ரெண்டிங்

மஞ்சள் விலையில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் நிம்மதி! 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூபாய் 1 கோடியே 7 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது. 

கனமழை காரணமாக, கடந்த வாரங்களில் 900 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்த நிலையில், தற்போது 1,070 மூட்டையாக அதிகரித்துள்ளது. மேலும் மஞ்சள் வரத்து அதிகரித்திருந்த நிலையில், மஞ்சள் விலையில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.