ட்ரெண்டிங்

சண்டை சேவல் விற்பனை அமோகம்!

 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு நேற்று (ஜன.13) 1,000- க்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை, சேலம் மட்டுமின்று நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கொண்டு வந்தனர். சேவல் வாங்க, கடப்பா, மைசூர், பெங்களூரு, தர்மபுரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். சேவல்கள் 1,500 முதல் 18,000 ரூபாய் வரை விலைபோனது.

 

வாரச்சந்தை மூலம் 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "பொங்கல் பண்டிகையில் பலரும் அனுமதியின்றி பல இடங்களில் சேவல் சண்டை நடத்துவர். இதனால்தான் வழக்கத்தை விட சண்டை சேவல் விற்பனை அமோகமாக நடந்தது என்றனர்.

 

சண்டை சேவல்கள் போட்டிகளுக்கு மட்டுமே வளர்க்கப்படும் சேவல்கள் சண்டை சேவல்கள் ஆகும்.