ட்ரெண்டிங்

அனுமதியின்றி செயல்பட்ட சேகோ ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகோ ஆலைகள் அதிகளவில் இயங்கி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு ஆத்தூரில் உள்ள சேகோ ஆலைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அனுமதியின்றி செயல்பட்ட சேகோ ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

 

இந்த சூழலில், அந்த ஆலைகளில் டீசல் இன்ஜின் மூலம் அழுக்கு மாவைச் சுத்தப்படுத்தி திப்பி தயாரிப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில், மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட ஆலைகள் மற்றும் மற்ற சேகோ ஆலைகளிலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ், ஆத்தூர் தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் அதிரடி ஆய்வை நடத்தினர்.

 

அப்போது, முல்லைவாடியில் உள்ள கணபதி, தங்காயி ஆகியோரின் சேகோ ஆலைகள், அம்மம்பாளையத்தில் குமார் என்பவரது ஆலையும், துலுக்கனூரில் உள்ள வெங்கடேஷ்வரா சேகோ ஆலையும் என மொத்தம் ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், மீண்டும் ஆலையை பயன்படுத்துவது தெரிந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.